இங்கிலாந்து நடிகருடன் திருமணம்; எமி ஜாக்சனுக்கு இயக்குநர் விஜய் நேரில் வாழ்த்து!
நடிகை எமி ஜாக்சன் இங்கிலாந்து நடிகர் எட்வர்டு வெஸ்ட்விக்கை இத்தாலி நாட்டில் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இயக்குநர் ஏ.எல்.விஜய் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.தமிழ் சினிமாவில் ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். ஆர்யா கதாநாயகனாக நடித்து வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எமி ஜாக்சன், அதன் பிறகு தாண்டவம், ஐ, கெத்து, தெறி, 2.0, மிஷன் சாப்டர் 1 என பல படங்களில் நடித்தார்.
இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த எட்வர்டு வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார். இதனையடுத்து இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் திருமணம் இத்தாலி நாட்டில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு நேரில் சென்று இயக்குநர் ஏ.எல்.விஜய் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்துச் செய்தியில், ‘அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துக்கள். இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது!’ எனத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் திரைத்துறையை சேர்ந்த பலர் எமி ஜாக்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.