அதர்வாவின் தம்பிக்கு ஜோடியாகும் அதிதி..‌ இயக்குனர் யார் தெரியுமா ?

Vishnu varadhan

விஷ்ணு வரதன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் மாஸ் இயக்குனராக வலம் வருபவர் விஷ்ணு வரதன். அஜித்தின் சூப்பர் ஹிட் இயக்குனரான விஷ்ணு வரதன்,  பில்லா, பில்லா 2, ஆரம்பம் என அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களை அவருக்கு ஹிட் கொடுத்துள்ளார். அதன்பிறகு கார்கில் போரின் வீரமரணமடைந்த விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாறை  திரைப்படமாக இயக்கியிருந்தார். ‘ஷேர்ஷா’ என்ற பெயரில் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடிப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

Vishnu varadhan

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 'விரும்பன்', 'மாவீரன்' ஆகிய படங்களின் கதாநாயகி அதிதி ஷங்கர் நடிக்கிறார். விஜய் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

Vishnu varadhan

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. இதையடுத்து தற்போது சென்னை ஈசிஆரில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

Share this story