கார்ல் மார்க்ஸ் சிலையுடன் இயக்குநர்கள் வெற்றிமாறன், சமுத்திரக்கனி...!

கார்ல் மார்க்ஸ் சிலையுடன் இயக்குநர்கள் வெற்றிமாறன், சமுத்திரக்கனி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மதுரையில் நடைபெற்றுவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இயக்குநர்கள் வெற்றிமாறன், சமுத்திரக்கனி, ஞானவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.அப்போது கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்து சமுத்திரக்கனி, ஞானவேல் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டினை முன்னிட்டு இன்று நடைபெற்ற மிகச்சிறப்பான மாப்ளா நடனமும் , இசை நிகழ்வுகளும் , புத்தக வெளியீடும் …
— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 4, 2025
நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த நண்பர்கள் திரைக்கலைஞர் சமுத்திரக்கனி , திரை இயக்குநர் வெற்றிமாறன் , திரை இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர்.… pic.twitter.com/S2C32ADqb3
இதனையடுத்து மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் சிலையுடன் சமுத்திரக்கனி மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இப்புகைப்படங்களை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.