மாற்றுத்திறனாளி குழந்தைகளை சினிமாவுக்கு அழைத்து சென்று குஷிப்படுத்திய தனுஷ் ரசிகர்கள்..!

raayan
சிதம்பரம் லேனா திரையரங்கில் தனுஷ் நடித்த ராயன் திரைப்படத்தை மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் படிக்கும் குழந்தைகளை அழைத்து வந்து படம் பார்க்க வைத்த தனுஷ் ரசிகர்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் இன்று வெளியானது. சிதம்பரத்தில் உள்ள லேனா திரையரங்கில் இந்த படம் இன்று வெளியானது. இதையொட்டி காலை முதலே ரசிகர்கள் லேனா திரையரங்குக்கு படையெடுத்து படம் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் பிறந்தநாள் வருவதையொட்டி அதை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்ய தனுஷ் ரசிகர் மன்ற இளைஞர் அணி நிர்வாகிகள், செயலாளர் அரவிந்தன் தலைமையில், சிதம்பரத்தில் உள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை அழைத்து வந்து அவர்களுடன் தியேட்டரில் அமர்ந்து படம் பார்த்து ரசித்தனர். மன வளர்ச்சிக்கு குன்றிய பள்ளி குழந்தைகளை ஒரு வேனில் ஆசிரியருடன் இணைந்து அழைத்து வந்து தியேட்டரில் அமர வைத்து அவர்களுடன் அமர்ந்து படம் பார்த்து ரசித்தனர்.


 

Share this story