ஆகா……’கங்குவா’ படத்தில் தரமான சம்பவம் இருக்கும் போலயே – திஷா படானியின் ஸ்டண்ட் இதோ!

photo

 ‘கங்குவா’ திரைப்படத்தின் கதாநாயகியான திஷா படானி லேடி ஜாக்கிசான்னாக மாறி டேக்வாண்டே ஸ்டண்ட் பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.


 

சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் தயாராகும் படத்திற்கு சமீபத்தில் ‘கங்குவா’ என பெயரிட்டு அதற்கான போஸ்டரை வெளியிட்டனர் படக்குழுவினர்.  மிகப்பிரம்மாண்டமாக வரலாற்று புனைவு கதையின் அடிப்படையில் உருவாகும் இப்படத்திற்கு வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய,  நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்கிறார்தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகும் இந்த படம் முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் 10 க்கும் மேற்பட்ட மொழிகளில்  கங்குவா வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.   இந்த நிலையில் அந்த படத்தின் கதாநாயகியான திஷா படானி தீவிர சண்டை பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியாகி வாய்பிளக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் ‘படத்துல தரமான சம்பவம் இருக்கும் போலயே’ என வெறித்தனமாக காத்துள்ளனர். 

Share this story