விருது விழாவில் இயக்குனர் நெல்சனுக்கு அவமரியாதையா ?... பவுசர்கள் செய்த காரியத்தால் அதிர்ச்சி !

nelson

 விருது விழா ஒன்றில் இயக்குனர் நெல்சனுக்கு அவ மரியாதை நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நயன்தாரா நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பிறகு சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்' படத்தை இயக்கினார். முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் உருவான இப்படம் நெல்சனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. 

nelson

பின்னர் நடிகர் விஜய்யை வைத்து 'பீஸ்ட்' படத்தை இயக்கினார். ஒரு வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் பிடித்து வைத்திருக்கும் கதைக்களம் கொண்ட இந்த மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இணையத்தளத்தில் அந்த படத்தை நெட்டிசன்கள் கண்டபடி விமர்சனம் செய்தனர். இதனால் அடுத்த பட வாய்ப்புகள் பறிப்போகும் நிலை ஏற்பட்டது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கி வருகிறார்.‌இந்த படத்தை பொறுத்தே நெல்சனின் திரையுலக பயணம் இருக்கும் என கூறப்படுகிறது. 

nelson

இந்நிலையில் தனியார் இணையத்தள ஊடகத்தின் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் திரையலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.‌ பொதுவாக இந்த நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களை பவுன்சர்கள் விழா நடக்கும் இடத்திற்கு அழைத்து செல்வது வழக்கம். ஆனால் விருது விழாவிற்கு நெல்சன் வரும்போது பவுன்சர்கள் அவரை கண்டுக்காமல் விழா நடக்கும் இடத்தை காட்டிவிட்டு சென்றுவிட்டனர். நெல்சனை அவமானப்படுத்தும் அந்த  வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கிடையே நெல்சன் வரும்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜும் அந்த இடத்தில் வந்துவிட்டால் இதுபோன்று நடந்துவிட்டதாக விழா ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளார். எனினும் இந்த விளக்கத்தை ரசிகர்கள் ஏற்க மறுத்துள்ளனர்

Share this story