‘தக் லைஃப்’ படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா...?

கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த 17ஆம் தேதி படத்தின் டிரெய்லர் படக்குழு வெளியிட்டது.
On every TRACK, the THUGS find their path.#ThugLifeAudioFromToday #ThuglifeAudioLaunch #ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR
— Raaj Kamal Films International (@RKFI) May 24, 2025
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan… pic.twitter.com/A3UXYVBgh4
அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இணையத்தில் 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. ஏற்கனவே வெளியான ஜிங்குச்சா மற்றும் சுகர் பேபி பாடல்கள் செம வைரலானதுஇந்நிலையில், இன்று மாலை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறஉள்ளது. அதற்கு முன் ‘தக் லைஃப்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, படத்தில் மொத்தம் 9 பாடல்கள் உள்ளது.