'டிராகன்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா...?

dragon

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.pradeep

இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'டிராகன்' படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயடு லொகர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் டிராகன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் உலக அளவில் சுமார் ரூ.6 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்றும், நாளையும் வாரத்தின் இறுதி நாட்கள் என்பதால் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story