‘கேம் சேஞ்ஜர்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

Game changer

ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வந்த் ‘கேம் சேஞ்ஜர்’ படம் நேற்று ஜனவரி 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்திருக்க எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 

இப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள நிலையில், அவர் மதுரையில் ஒரு கலெக்டரின் வாழ்க்கையில் நடந்ததை அடிப்படையாக வைத்து எழுதியுள்ளதாக எஸ்.ஜே.சூர்யா கூறியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. ram charan

இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் உலகம் முழுவதும் 186 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பில் நிறுவனம் அவர்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் அல்லு அர்ஜூன் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா 2 படம் 294 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story