‘குட் பேட் அக்லி’ 2-வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், பிரபு, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக இந்தப் படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்ற பார்வையாளர்களுக்கு படம் கனெக்ட் ஆகவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில் ‘குட் பேட் அக்லி’ முதல் நாளில் ரூ.30.9 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இரண்டாம் நாளான நேற்று படம் தமிழ்நாட்டில் ரூ.15 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக உலக அளவில் 2 நாட்களையும் சேர்த்து படம் ரூ.75 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் இருப்பதால் ரூ.100 கோடியை விரைந்து கடக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. படத்தின் பட்ஜெட் ரூ.200 முதல் ரூ.250 கோடி வரை இருக்கலாம் என தெரிகிறது.