ரிலீஸ் ஆன 10 நாட்களில் கல்கி 28 98 ஏடி படம் வாரிக் குவித்த கோடிகள் எவ்வளவு தெரியுமா?

1
நாக் அஸ்வின் இயக்கிய கல்கி 28 98 ஏடி படத்தில் நடிகர் பிரபாஸுடன்  கமலஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதோடு இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் ஆகியோர் சிறப்பு கேரக்டரில் நடித்திருந்தார்கள்.

தமிழ்நாட்டில் இந்த படம் இதுவரையில் 31 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. இதுவே மாபெரும் வசூலாக பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், கல்கி திரைப்படம் கடந்த 10 நாட்களில் சுமார் 805 கோடி வரை உலக அளவில் வசூல் செய்துள்ளதாம் . இந்த படத்தை 600 கோடி ரூபாய் செலவில் எடுத்துள்ள நிலையில், தற்போது பத்து நாட்களில் 800 கோடியை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this story