வசூல் வேட்டையில் அசத்தும் 'லக்கி பாஸ்கர்'- 7 நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Lucky baskar

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


இந்நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் உலகம் முழுவதும் 7 நாட்களில் ரூ.71.2 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வார இறுதியில் இத்திரைப்படம் 100 கோடி வசூலை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் லக்கி பாஸ்கர் திரைப்படம் வரவேற்பை பெற்றுள்ளதால் இத்திரைப்படம் திரையிடப்படும் ஷோக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதல் நாள் தமிழ்நாட்டில் 75-க்கும் மேற்பட்ட ஷோக்கள் திரையிடப்பட்ட லக்கி பாஸ்கர் திரைப்படம் 6 நாளில் 543-க்கும் மேற்பட்ட ஷோக்களில் திரையிடப்பட்டுள்ளது.

Share this story