"சப்தம்" படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

sabtham

அதி நடிப்பில் வெளியாகி உள்ள  சப்தம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு ஈரம் திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து நகுல் நடிப்பில் வெளிவந்த வல்லினம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த  பார்டர், குற்றம் 23 திரைப்படத்தை அறிவழகன் இயக்கினார். 

sabtham
ஆதி தற்பொழுது மீண்டும் ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன் இயக்கும் ’சப்தம்' படத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தில் லக்ஷ்மி மேனன், சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.   


சஸ்பென்ஸ், திகில் பாணியில் உருவாகியுள்ள இந்த படம், பிப்ரவரி 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் பைனான்சியரிடம் பெற்ற கடனை திருப்பி தர தாமதம் ஏற்பட்டதால் படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திரைப்படம் திட்டமிட்டமிபடி பிப்ரவரி 28ம் தேதி வெளியாகாமல், நேற்று மார்ச் 1-ந்தேதி காலை முதல் திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில், சப்தம் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் ரூ. 1 கோடி வசூல் செய்துள்ளது.

Share this story