‘வீர தீர சூரன்’ படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் 2 நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சித்தா’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘வீர தீர சூரன்’. எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.ஹெச்.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படம் கடந்த 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற வழக்கு காரணமாக படம் குறித்த நேரத்தில் வெளியாகவில்லை. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாலை முதல் படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இந்நிலையில் முதல் நாள் இப்படம் ரூ.3.4 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.3.25 கோடியும் என மொத்தம் ரூ.6.65 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.