கங்குவா படம் எப்படி இருக்கு தெரியுமா ? மதன் கார்க்கி சொன்ன விமர்சனம்..!

madan karki

சூர்யா மற்றும் சிவா கூட்டணியில் உருவான கங்குவா திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தை பார்த்துவிட்டு மதன் கார்க்கி கருத்து தெரிவித்துள்ளார்.  

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யாவின் ரசிகர்கள் கங்குவா படத்தை தான் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தனர். அவர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கங்குவா திரைப்படம் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. முதலில் இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு தான் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நாளில் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் வெளியாவதாக வந்த அறிவிப்பால் கங்குவா திரைப்படம் நவம்பர் மாதத்திற்கு தள்ளிப்போனது.

தற்போது இப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் தற்போதே படக்குழு ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. சூர்யா உட்பட படக்குழு அனைவரும் இந்தியா முழுவதும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றனர். தற்போது கங்குவா படத்தின் ப்ரோமோஷன் டெல்லியில் நடைபெற்று வருகின்றது.


இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு செய்ய இருக்கின்றது. தமிழ் சினிமாவில் உருவாகும் முதல் பான் இந்திய படம் கங்குவா என்பதால் இப்படத்தின் ப்ரோமோஷனில் படக்குழு மிகவும் கவனமுடன் உள்ளது. நினைத்தபடி இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றால் வசூலில் இதுவரை தமிழ் படங்கள் செய்யாத சாதனைகளை செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் கோலிவுட் முழுவதும் கங்குவா படத்திற்கு பாசிட்டிவான டாக் இருந்து வருகின்றது. இப்படத்தை பார்த்த ஒரு சிலர் படம் சிறப்பாக வந்திருப்பதாக பாராட்டி பேசி வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி சமீபத்தில் கங்குவா முழு படத்தையும் பார்த்து அசந்துபோனதாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். கங்குவா படத்தின் டப்பிங் பணிகளுக்காக இப்படத்தை நூறு முறைக்கு மேல் மதன் கார்க்கி பார்த்துள்ளாராம். இருப்பினும் ஒவ்வொரு முறை இப்படத்தை பார்க்கும்போதும் பிரம்மிப்பாக இருப்பதாக கூறியிருக்கின்றார். பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், சூர்யா சாரின் நடிப்பு, சிவாவின் இயக்கம் என அனைத்துமே சிறப்பாக இருப்பதாக மதன் கார்க்கி மனதார பாராட்டியுள்ளார். இதையெல்லாம் வைத்து பார்க்கையில் கங்குவா திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு கண்டிப்பாக பெருமை சேர்க்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story