அடேங்கப்பா…… ராதா தனது மகளுக்கு கொடுத்த சீதனம் என்ன தெரியுமா?

photo

நடிகை ராதா தனது மூத்த மகளும் நடிகையுமான கார்த்திகாவுக்கு சமீபத்தில் கோலாகலமாக திருமணம் செய்து வைத்தார். இந்த நிலையில் ராதா தனது மகளுக்கு திருமண சீதனமாக என்ன கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

photo

80களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதா. கேரளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் கடந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலக்குகிறார். இந்த நிலையில் இவர் தனது மூத்த மகளும், கோ பட  நடிகையுமான கார்த்திகாவுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தார்.

அந்த திருமணத்திற்கு பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிலையில் தனது மகளுக்கு திருமண சீராக 500 சவரன் தங்க நகைகளை கொடுத்துள்ளார் ராதா, அதுமட்டுமல்லாது நட்சத்திர ஹோட்டல் ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார் அதன் மதிப்பு பல கோடி என கூறப்படுகிறது. இந்த தகவல் பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

Share this story