அட்லீ, சல்மான் கூட்டணியில் உருவாகும் படம் என்ன கதைக்களம் தெரியுமா..?

atlee

அட்லீ, சல்மான் கான் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் பிரீயட் டிராமா எனவும், இப்படத்தில் நடிக்க ரஜினிகாந்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறபப்டுகிறது.சல்மான் கான், அட்லீ திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் அட்லீ தமிழ் சினிமாவில் 'ராஜா ராணி' என்ற ரொமான்டிக் திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் அட்லீ விஜய்யை வைத்து தெறி, மெர்சலி, பிகில் ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உருவெடுத்தார். இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லீ, குறுகிய காலத்தில் பாபெரும் இயக்குநரானார். இதனைத்தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் ஷாருக்கானுக்கு பிடித்த இயக்குநர் வரிசையில் இடம்பிடித்தார்.



இந்நிலையில் அடுத்ததாக மற்றொரு பாலிவுட் உச்ச நடிகர் சல்மான் கானை வைத்து இயக்கவுள்ளார். இத்திரைப்படம் ராஜமௌலி இயக்கிய மகதீரா போன்று பிரியட் டிராமாவாக உருவாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முன்னதாக கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக அட்லீ தனி உலகத்தை உருவாக்கவுள்ளதாகவும், அதில் சல்மான் கான் போர் வீரராக நடிக்கிறார் என்ற சுவாரஸ்யமான தகவல்களும் கோலிவுட் வட்டாரத்தில் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் சல்மான் கானுடன், ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் என எவர் நடித்தாலும் அப்படம் இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஒரு கமர்ஷியல் விருந்தாக இருக்கும். மேலும் அந்த படமும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்க வாய்ப்புள்ளது. அட்லீ, சல்மான் கான் பட ஷூட்டிங் அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story