ரஜினி171 கதையைக் கேட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

ரஜினி171 கதையைக் கேட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி உள்ள 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். வரும் 19-ம் தேதி லியோ திரைப்படம் வெளியாக உள்ளது.

ரஜினி171 கதையைக் கேட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

இதைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 171-வது படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், ரஜினி 171 படத்தின் கதையை லோகேஷ், விஜய்யிடம் சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட விஜய், பத்து நிமிடத்தில் இது போல ஒரு கதை என பிடித்ததே இல்லை எனவும், கதை பயங்கரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ் இதனை பகிர்ந்துள்ளார். 

Share this story