மெகாஹிட் படமான மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

1

வசூலிலும் விமர்சன ரீதியிலும் சாதனை படைத்த திரைப்படம் தான் மகாராஜா. இந்த திரைப்படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாகும்.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் தான் மகாராஜா படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தை சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிச்சாமி ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளார்கள். இதற்கு அஜனீஸ் லோகநாத் இசையமைத்திருந்தார்.

மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, மம்தா மோகனதாஸ், அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி நட்ராஜ் உட்பட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள்.

மகாராஜா திரைப்படம் உலக அளவில் சுமார் 100 கோடி வரை வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.அதன்படி திரையரங்குகளில் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் எதிர்வரும் 12-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this story