தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா?
1702901245717
கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர்களான ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி, தம்பி ராமையா ஆகியோரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘தனி ஒருவன்’. விறுவிறு காட்சிகள் கொண்ட படத்தில் மிரட்டலான வில்லனாக அரவிந்த் சாமி அசத்தியிருப்பார். இந்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. இயக்குநர் மோகன் ராஜாவும், ஜெயம் ரவியும் ஏழாவது முறையாக 'தனி ஒருவன் 2' திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.