தி கோட் படத்தில் சினேகா கேரக்டருக்கு முதல் சாய்ஸ் யார் தெரியுமா? - இயக்குனர் சொன்ன சீக்ரெட்

GOAT

தி கோட் படத்தில் விஜய்க்கு மனைவியாக சினேகா நடித்ததுதான் சரி என இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் நயன்தாரா தெரிவித்துள்ளார். இதனை வெங்கட்பிரபு தற்போது பகிர்ந்துள்ளார். இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘தி கோட்’. செப்டம்பர் 5-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மோகன், மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பலரும் விஜய்யுடன் நடித்திருந்தார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார் சினேகா. நீண்ட வருடங்கள் கழித்து விஜய் - சினேகா கூட்டணி இந்தப் படத்தில் இணைந்து நடித்திருந்தது.

goat

முதலில் இந்தக் கதாபாத்திரத்துக்கு நயன்தாராவிடம் பேசியதாக இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். இது குறித்து வெங்கட்பிரபு, “சினேகா மேடம் நடிப்பதற்கு முன்பு நயன்தாரா மேடத்திடம் பேசிக் கொண்டிருந்தோம். அது நடக்கவில்லை. ஆனால், நயன்தாரா மேடம் படம் பார்த்துவிட்டு போன் செய்தார். ‘இந்த ரோலுக்கு சினேகாவை விட சிறப்பாக யாரும் செய்திருக்க முடியாது. ரொம்ப நல்ல பண்ணியிருக்காங்க. சினேகாவிடம் சொல்லுங்கள். நீங்கள் சரியான விஷயம் தான் செய்திருக்கிறீர்கள்’ என்று நயன்தாரா மேடம் கூறினார். அவருடைய பாராட்டு என்பது ரொம்ப உண்மையாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார் வெங்கட்பிரபு.

Share this story