டாக்டர் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு.... ரசிகர்கள் கொண்டாட்டம்...

டாக்டர் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு.... ரசிகர்கள் கொண்டாட்டம்...

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர். 

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் டாக்டர். நெல்சன் இயக்கிய இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். 

டாக்டர் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு.... ரசிகர்கள் கொண்டாட்டம்...

சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் இணைந்து யோகிபாபு, வினய் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடல் 8 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன.

டாக்டர் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு.... ரசிகர்கள் கொண்டாட்டம்...

மேலும், நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்ட இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், டாக்டர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு பெற்றதை படக்குழுவினரும், ரசிகர்களும் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
 

Share this story