நடிகர் ரகுவரனின் திரைப்பயணம் குறித்த ஆவணப்படம்.. போஸ்டர் வெளியீடு...!

மறைந்த நடிகர் ரகுவரனின் திரைப்பயணம் தொடர்பான ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ரகுவரன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியானது ‘யாரடி நீ மோகனி’. ‘முதல்வன்’, ‘பாட்ஷா’, ‘ரட்சகன்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ உள்ளிட்ட ஏராளமான படங்கள் ரகுவரனின் நடிப்புக்கு அழுத்தமான நடிப்புக்குச் சான்று. 2008 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் நடிகர் ரகுவரன் காலமானார்.
A documentary by Hasif. Thank you. Coming soon pic.twitter.com/ylL7MhKc1M
— Rohini Molleti (@Rohinimolleti) March 19, 2025
ரகுவரன் மறைந்து 18 ஆண்டுகளாகும் நிலையில், அவரது திரைப்பயணம், வாழ்க்கை உள்ளிட்டவை குறித்து ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஹாசிப் அபினா ஹகீப் என்பவர் இந்த ஆவணப்படத்தை இயக்கி உள்ளார். இதன் போஸ்டரை ரகுவரனின் மனைவியும் நடிகையுமான ரோகிணி வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.