இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் யுத்தம் குறித்த ஆவணப்பட டிரெய்லர் வெளியீடு

documentary

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் யுத்தம் குறித்த ஆவணப்பட டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி மிகவும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். இந்தியா - பாகிஸ்தான் போட்டியை இருநாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒன்றாகவும் இருந்து வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி ஐ.சி.சி. தொடர்கள் தவிர்த்து மற்ற போட்டிகளில் விளையாடுவதை கடந்த சில ஆண்டுகளை தவிர்த்து வந்துள்ளன. இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகளை மையப்படுத்தி ஆவணப்படம் ஒன்று தயாராகி உள்ளது.

இந்த ஆவணப்படத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளில் விளையாடிய முன்னாள் வீரர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டிகளும் சில இடங்களில் காட்சியாக வைக்கப்படுகின்றன.
பிரபல ஓ.டி.டி. தளமான நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்து இருக்கும் இந்த ஆவணப்படம், "தி கிரேட்டஸ்ட் ரைவல்ரி இந்தியா பாகிஸ்தான்" என்ற தலைப்பில் வெளியாகிறது. இதையொட்டி, இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஆவணப்படம் பிப்ரவரி 7-ம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Share this story