என்னை பழிவாங்கீடாதீங்க... சொர்க்கவாசல் பட விழாவில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு...!

rj balaji

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே. பாலாஜி. இவரது நடிப்பில் தற்போது சொர்க்கவாசல் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து கருணாஸ், நட்டி நடராஜ், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தினை சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். கிறிஸ்டோ சேவியர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஸ்வைப் ரைட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படம் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றன. அதே சமயம் இன்று (நவம்பர் 23) இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

 


அப்போது பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “ட்ரைலர் நாளைக்கு வரப்போகுது என்று போஸ்டர் போட்டால் என்னுடைய விநியோகஸ்தர் எஸ் ஆர் பிரபு மீதான கோபத்தால் என்னை திட்டுகிறார்கள். நான் பாவாடை கிடையாது. சங்கியும் கிடையாது. படத்தை பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள். அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. படம் நன்றாக இல்லை என்றால் சொல்லுங்கள். ஆனால் பழிவாங்கும் நோக்கத்தில் டார்கெட் பண்ணி அடிக்காதீங்க. நல்ல படம் எடுத்திருக்கிறோம். உங்கள் அனைவரின் ஆதரவும் இந்த படத்திற்கும் வேண்டும். அப்போதுதான் இந்த படம் வாழை, லப்பர்பந்து போன்ற படங்களைப் போல் அனைவரிடமும் போய் சேரும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story