"கிண்டல் கேலிகளால் கெடுக்காதீர்கள்..." சிவகார்த்திகேயன் குறித்து பைரி பட கதாநாயகன் நெகிழ்ச்சி

sk

நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பைரி படத்தின் நாயகன் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் ஜான் கிளாடி இயக்கத்தில் நடிகர் சையத் மஜித் நடிப்பில் உருவான திரைப்படம் பைரி. கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்றது. முக்கியமாக, சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் படத்தின் உருவாக்கம் பலரையும் கவர்ந்தது.
 
இந்த நிலையில், அண்மை காலமாக நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளங்களில் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டு வருவதைக் குறிப்பிட்டு, பைரி நாயகன் சையத் மஜீத் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சமூக வலைதளங்களில் சகோதரர் சிவகார்த்திகேயனை கிண்டல் செய்வதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நான் என் நண்பர் மூலம் பைரி படத்தை நடிகர் சிவகார்த்திகேயனிடம் கொண்டு சென்றோம். அப்படத்தைப் பார்த்தவர் எங்களை நேரில் அழைத்துப் பாராட்டினார். அப்போது, படத்தின் இயக்குநர் ஊரில் இல்லாததால் அவரால் சந்திக்க முடியவில்லை.
 



இதை அறிந்துகொண்டவர் இயக்குநரை நாளை வருச்சொல்லுங்கள் நான் சந்திக்க வேண்டும் என்றார். அடுத்தநாள் இயக்குநர் உள்பட படக்குழுவினர் அவரைச் சந்தித்து 2 மணி நேரத்துக்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தோம். சகோதரர் சிவகார்த்திகேயன் எங்களைப்போல் வளரும் கலைஞர்களுக்கு பெரிய ஆதரவாக இருப்பவர். உங்கள் கிண்டல் கேலிகளால் அதை கெடுக்காதீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

Share this story