கூலியில் லோகேஷுடன் மீண்டும் இணையும் பிரபலம் - செம அப்டேட்

tt

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த வரும் 170 வது படமான வேட்டையன் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய தா.செ .ஞானவேல் இயக்கி வருகிறார்.

ggg

இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

ff

 வேட்டையின் திரைப்படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கம் கூலி திரைப்படத்தில் நடிக்கிறார்.  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கும் அனிருத் இசை அமைக்கிறார்.  அண்மையில் கூலி படத்தில் ரஜினியின் தோற்றத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருந்த நிரையில்  ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.இந்நிலையில் கூலி திரைப்படத்தில் க்ரிஷ் கங்காதரன் இணைந்துள்ளார். கூலி படத்தின் படப்பிடிப்பு வருகிற 5 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் க்ரிஷ் கங்காதரன்ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் தான் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story