“ஜஸ்ட் மிஸ்……….. எட்டு அடி நீள பாம்பிடமிருந்து தப்பிய வெற்றிமாறன்” – ‘விடுதலை’ பட அனுபவத்தை பகிர்ந்த ‘வேல்ராஜ்’.

photo

கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுள்ள திரைப்படம் ‘விடுதலை’. வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்து மிரட்டியிருந்தார். தொடர்ந்து படம் வசூலை வாரி குவித்துவரும் நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் ‘விடுதலை’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

photo

அதில் அவர் கூறியதாவதுவிடுதலை படத்தின் வெற்றிக்கு முழுக்க முழுக்க வெற்றிமாறன் தான் காரணம்தன்னுடைய படங்களை பார்த்து  வெற்றிமாறன் தான் முதலில் கமெண்ட் அடிப்பார்.எது ஒர்கவுட் ஆகும் , எது ஒர்கவுட் ஆகாது என்பது அவருக்கு நன்கு தெரியும்.வெர்றிமாறன் ஒரு கடின உழைப்பாளி. ஒளிப்பதிவு குறித்த ஞானமும் அவருக்கு உண்டு. அவருக்கு எது தேவையோ அதை சரியாக நம்மிடமிருந்து வாங்குவார். நாங்கள் சூட் செய்த காட்டில் இல்லாத பாம்புகளே இல்லை என்று சொல்லலாம். மழை நேரத்தில் சாதாரணமாகப் பாம்புகள் சென்றுகொண்டிருக்கும். ஒருமுறை வெற்றிமாறன் சார் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர் முன்பு எட்டு அடியில் ஒரு பாம்பு சென்றது. ஜஸ்ட் மிஸ்….. அந்தப் பாம்பிடம் இருந்து அவர் தப்பித்தார். இப்படி நாங்கள் பல்வேறு சவால்களைச் சந்தித்தோம். படப்பிடிப்பு தளத்தில் பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தோம் ஆம்புலன்ஸ் உட்பட. இந்தப் படத்துக்காக வெளிநாட்டிலிருந்து கேமராவையும், கேமரா ஆப்ரேட்டிங் மேன் கூடப் பயன்படுத்தினோம்.” என படம் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் வேல்ராஜ்.

photo

Share this story