இளையராஜாவின் மிரட்டும் பாடல் மற்றும் பின்னணி இசையில் டோரதி -பட விமர்சனம்
சனந்த், ரிஷிகாந்த் சிறு வயது முதல் நண்பர்கள். ரிஷிகாந்தின் சாதி காரணமாக சனந்தின் அப்பாவுக்கு இவர்களது நட்பு பிடிக்கவில்லை. அந்த ஊருக்கு வரும் டோரதியான கீர்த்தி சுரேஷை சனந்தின் அண்ணன் திருமணம் செய்துகொள்கிறார். சில நாட்களிலேயே கீர்த்தி தற்கொலை செய்ய, அது கொலை என்பது தெரிகிறது. இதற்கிடையே சனந்த், திருநங்கையாக மாறுகிறார். இந்த விஷயம் ஊருக்கு தெரிந்தால் குடும்ப மானம் போய்விடும் என சனந்தை கொல்ல, அவரது நண்பர் ரிஷிகாந்துக்கே அசைன்மென்ட் தருகிறார் சனந்தின் தந்தை. அதற்கு பிறகு நடப்பதே மீதி கதை.
இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும்தான் படத்தின் நிஜ ஹீரோ. அந்த அளவுக்கு மனிதர் தனது இசையால் திரையில் விளையாடியிருக்கிறார். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சனந்தும் ரிஷிகாந்தும் போட்டி போட்டு நடித்துள்ளனர். திருநங்கையாக மாறிய தனது நண்பனை ஏற்க மறுத்து, அவனை அருவருப்பாக பார்க்கும் காட்சிகளில் இருந்து நண்பனை எப்படி கொலை செய்வது என தவிக்கும் காட்சிகள் வரை சிறப்பாக நடித்துள்ளார் நடிகர் ரிஷிகாந்த். திருநங்கையாக மாறியபின் தனது நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார் சனந்த்
குறிப்பாக தனது நண்பனோடு அவர் செல்லும் பயணம், அதில் இருவருக்கும் இடையே ஏற்படும் மன மாற்றங்கள் அனைத்திலும் சனந்த் ஸ்கோர் செய்கிறார். கீர்த்தி சுரேஷ்தான் கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் கேரக்டர். அதை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லனாக முத்துராஜ் மிரட்டியிருக்கிறார்.

