'டிராகன்' என் வாழ்க்கையை மாற்றியது... : நடிகை கயாடு லோஹர் நெகிழ்ச்சி...

kayadu

'டிராகன்' படம் என் வாழ்க்கையை மாற்றியுள்ளது என நடிகை கயாடு லோஹர் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்த கயாடு லோஹர் தனது கேரக்டர் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அந்தத் பதிவில் அஷ்வத் மாரிமுத்து முதன்முதலில் Zoomல் எனக்கு கதை சொல்லிக் கொடுத்த தருணம் இன்னும் நினைவில் உள்ளது. அது கீர்த்தி கேரக்டருக்காக இருந்தது. அந்த கதாபாத்திரம் என்னை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஒரு உறுதியான, ஆழமான கதாபாத்திரத்தை செய்ய கிடைத்த வாய்ப்பு என்று நினைத்தேன். ஆனால் அதன் பிறகு அவரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சிறிது வருத்தமாகவும், அந்த வாய்ப்பு எனக்கு தவறிவிட்டது என்ற எண்ணமும் ஏற்பட்டது. ஆனால் அதற்கே ஒரு காரணம் இருந்தது. ஒரு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் அஷ்வத் என்னை தொடர்பு கொண்டு, இந்த முறை பல்லவிக்காக கதை சொன்னார். அவர் கதை சொல்லி முடித்தபோது, “ஏன் கீர்த்தி இல்லை? ஏன் பல்லவி?” என்ற குழப்பம் எனக்குள் இருந்தது. அதன்பின் அவர் ஒரு முக்கியமான விஷயத்தை கூறினார். 


கீர்த்தி மற்றும் பல்லவி என இது இரண்டு நாயகிகளுக்கான படம் என்று மட்டும் நினைக்காதே. இதிலொன்று மற்றொன்றை விட முக்கியமானது என்று நினைக்காதே. நான் உன்னை, பல்லவியை மக்கள் காதலிக்கும்படி காட்டுவேன். இதை நான் உனக்கு உறுதி கூறுகிறேன் என்றார். அவரது வார்த்தைகள் உண்மையாகி விட்டன. அஷ்வத் மாரிமுத்துவின் திரைப்படங்கள் எப்போதும் நன்றாக எழுதப்பட்ட, வலுவான பெண்மையை கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கும். அவர் எனக்கொரு அற்புதமான கதாபாத்திரத்தை கொடுத்தார். இரண்டாவது முறையாக கதையை கேட்டதும், முழு திரைக்கதை மற்றும் பல்லவி கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை புரிந்ததும், இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதை விடுவிக்க முடியாத ஒரு வாய்ப்பாக உணர்ந்தேன். நன்றி அஷ்வத்..

 

பல்லவியை எனக்கு அளித்ததற்கும், உங்களுடைய எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதற்கும், எனக்காக மேலதிக முயற்சி செய்து, சிறந்த அறிமுகத்தை வழங்கியதற்கும்… இது கலைஞர்களின் மேல் உள்ள அன்பையும், அவர்களுக்கு நீங்கள் தரும் சிறந்த வாய்ப்புகளையும் காட்டுகிறது. எப்போதும் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன். இவ்வாறு கயாடு லோஹர் பதிவு செய்துள்ளார்.

Share this story