ஓடிடியிலும் கவனம் பெறும் ‘டிராகன்’..!

திரையரங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘டிராகன்’ திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது.
இயக்குநர் அஷ்வத் மாரித்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்’. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வர், கயாடு லோஹர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ரூ.150 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
D.Raghavan epdi Dragon aanaaru dhaana yosikreenga? Romba yosikama poi padam paarunga 👀🐉
— Netflix India South (@Netflix_INSouth) March 21, 2025
Watch Dragon, now on Netflix in Tamil and Hindi, and as Return of the Dragon in Telugu, Kannada and Malayalam. #DragonOnNetflix #ReturnOfTheDragonOnNetflix pic.twitter.com/BwNv1oYyNB
இப்படம் வெளியாகும் முன்னரே, ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இதன் ஓடிடி உரிமையினை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் டிராகன் திரைப்படம் ஃநெட்ப்ளிக்ஸ்-ல் வெளியாகி உள்ளது.