ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிராகன் நாயகி கயாடு லோஹர்.. என்ன காரணம் தெரியுமா..?

kayadu

தனது பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக டிராகன் பட நாயகி கயாடு லோஹர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் நடித்து பிரபலமானவர் கயாடு லோஹர். அதன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறிவிட்டார். படமும் பெரிய வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர தொடங்கின. 

இதையடுத்து அதர்வாவுடன் இதயம் முரளி என்கிற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படமும் விரைவில் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் கயாடு லோஹரின் பெயரில் சோசியல் மீடியாவில் குறிப்பாக பேஸ்புக் மற்றும் எக்ஸ் வலைதளங்களில் பல கணக்குகள் போலியாக துவங்கப்பட்டுள்ளன.


இதை கவனித்த கயாடு லோஹர் தனது அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கத்தில் இது குறித்து ரசிகர்களுக்கு ஒரு அலர்ட் கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், “சோசியல் மீடியாவில் என்னுடைய இந்த எக்ஸ் கணக்கு தவிர என் பெயரில் எந்த கணக்கும் இல்லை. மற்றவை அனைத்தும் போலிகள், அதில் வெளியாகும் செய்திகள் எதையும் ரசிகர்கள் நம்ப வேண்டாம். நான் இந்த அதிகாரப்பூர்வ கணக்கின் மூலமாக சரியான நேரத்தில் உங்களுடன் சரியான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Share this story