டிராகன் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்... வீடியோ ரிலீஸ்...!

டிராகன் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழுவினர் ஒன்றிணைந்து மகிழ்ந்த வீடியோ வெளியாகி உள்ளது.
இயக்குநர் அஷ்வத் மாரித்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்’. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வர், கயாடு லோஹர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
Victory feels even better when celebrated together! 🙌🏼✨
— AGS Entertainment (@Ags_production) March 5, 2025
Watch the #DragonTeam reunite for the #DragonSuccessMeet ! 🐉❤️🔥@pradeeponelife in & as #Dragon
A @Dir_Ashwath Araajagam 💥🧨
A @leon_james Musical 🎵#PradeepAshwathCombo#DragonRunningSuccessfully#KalpathiSAghoram… pic.twitter.com/Hc1vIwkhkc
இந்நிலையில் அதனை கொண்டாடும் வகையில் டிராகன் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில், அஷ்வத் மாரித்து மற்றும் பிரதீப் ரங்கநாதன், ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி, மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். அதுதொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.