டிராகன் வெற்றி... பிரதீப் ரங்கநாதன் உடன் கேக் வெட்டி கொண்டாடிய விக்னேஷ் சிவன்...

wikki

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள டிராகன் படத்தின் வெற்றியை விக்னேஷ் சிவன் உடன் கொண்டாடியுள்ளார்.


இயக்குநர் அஷ்வத் மாரித்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்’. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.  திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் டிராகன் படத்தை கொண்டாடி கமெண்ட் செய்து வருகின்றனர். dragon

 
இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் ’லவ் இன்சுரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Company) படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் லவ் இன்சுரன்ஸ் கம்பெனி படக்குழு உடன் இனைந்து பிரதீப் ரங்கநாதன் டிராகன் பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கொண்டாட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் கேக் வெட்டிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

   

Share this story