"திரௌபதி 2" படத்தில் நடிக்க வாய்ப்பு... - இயக்குனர் மோகன் ஜி அறிவிப்பு...

இயக்குநர் மோகன் ஜி இயக்கவுள்ள "திரௌபதி 2" படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
2016 ம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானாவர் மோகன் ஜி. திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் மோகன் ஜி. திரைப்படங்களைத் தாண்டி அரசியல், கருத்துகளையும் தொடர்ந்து பதிவு செய்து சர்ச்சைக்குரிய இயக்குநராகவே இருந்து வருகிறார்.
#Draupathi2 selecting Male and Female artists from tomorrow.. Make use of it to show your acting skills... pic.twitter.com/RjpuHY3rVl
— Mohan G Kshatriyan (@mohandreamer) February 28, 2025
இந்த நிலையில், திரௌபதி படத்தின் 2-ம் பாகத்தை இயக்க உள்ளதாக அண்மையில் இயக்குனர் மோகன் ஜி அறிவித்தார். தற்போது அந்த படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேவை எனவும் தமிழ் பேச தெரிந்து இருக்க வேண்டும், மார்ச் 1 முதல் 15 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் எனவும் இயக்குனர் மோகன் ஜி அறிவித்துள்ளார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.