“ லேடி சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டார் தான்” ‘டிரைவர் ஜமுனா, செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.

aishwarya

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரிலீஸிற்கு தயாரகியுள்ள திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. பெண் மைய கதாபாத்திரத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை  இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கியுள்ளார். படத்தில் ஐஷ்வர்யா ரஜேஷ் கார் ஒட்டுனராக நடித்துள்ளார். இப்படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

aish

திரில்லர் கதைகளத்தில்  உருவாகியுள்ள இந்த படம் இம்மாதம் 18-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அதில் ‘டிரைவர் ஜமுனா’ படக்குழுவினர், படம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்,அதில் கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷிடம் செய்தியாளர் ஒருவர் “முதலில் பெரிய பெரிய நடிகர்களுடன் நடித்தீர்கள், பின்னர் பெண் மைய கதாபாத்திர படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறீர்கள்? நீங்கள் லேடி சூப்பர் ஸ்டார்  பாதையை பின் பற்றுகிறீர்களா? “ என கேட்டார்.

aishawarya rajeash

அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் “ லேடி சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டார்தான் , நான் அவங்கல ஃபாலோ பண்ணல , ஹீரோஸ் கூட நடிக்க நானும் ஆசை படுறேன், இந்த மாதிரியும் படம் நடிக்கவும் ஆசை, அதுவா தானா அமையுது, நான் பிளான் பண்ணி பண்ணல” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share this story