"சினிமாவை சிதைக்கும் போதை". -ஸ்ரீகாந்தை போல போதை வழக்கில் சிக்கிய சினிமா பிரபலங்கள்

ரோஜாக்கூட்டம் நடிகர் ஸ்ரீகாந்தை போல், போதை வழக்கில் இதுவரை சிக்கிய சில முக்கிய சினிமா பிரபலங்கள் பற்றிய விவரம் பின்வருமாறு
1.போதை வழக்கில் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சார்மி ஆகியோரும் நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், இயக்குனர் புரி ஜெகன்னாத் உள்ளிட்டோரும் சிக்கினர்.
2.பாலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை வழக்கில் கைதானார். தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்துக்கு போதைப் பொருளை அவர் கொடுத்துள்ளார். அவரது வாக்குமூலம் அடிப்படையில் நடிகைகள் தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூரிடமும் விசாரணை நடந்தது.
3.சொகுசு கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்திய ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 15 பேரை அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
5.அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நடித்த பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ, போதை பொருள் வைத்திருந்ததாக போலீசாரிடம் சிக்கினார்.
6.இதை தொடர்ந்து நடிகை ஹேமா கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.