குடித்துவிட்டு தாக்குவார்... ஷகிலா மீது வளர்ப்பு மகள் புகார்...

குடித்துவிட்டு தாக்குவார்... ஷகிலா மீது வளர்ப்பு மகள் புகார்...

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ஷகிலா. துணை நடிகையாக அறிமுகமானவர் இவர், ஆபாச படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என 100க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 90களில் முன்னணி நடிகர்களாக இருந்த மோகன் லால், மம்மூட்டி போன்ற நடிகர்களுக்கே போட்டியாக இருந்து வந்தார். கொடிகட்டி பறந்த ஷகிலாவின் திரைப்படங்கள் வசூலில் சாதனை படைத்தன.  ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த ஷகிலா, குணசித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தார். சமீபத்தில் கூட ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.  நடிகை ஷகிலாவிற்கும் அவரது வளர்ப்பு மகள் ஷீத்தாவின் குடும்பத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஷீத்தாவும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து நடிகை ஷகிலாவை தாக்கியுள்ளனர்.

குடித்துவிட்டு தாக்குவார்... ஷகிலா மீது வளர்ப்பு மகள் புகார்...

ஆனால், தற்போது நடிகை ஷகிலா தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த வளர்ப்பு மகள் ஷீத்தலை தாக்கியதாக, அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 

Share this story