மது போதையில் ரகளை... ஜெயிலர் வர்மன் கைது

மது போதையில் ரகளை... ஜெயிலர் வர்மன் கைது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் படத்தை இயக்கியிருந்தார். இதில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சிவராஜ்குமார், மோகன் லால், சுனில் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்தார். கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அதிரடி கிளப்பி வசூலை அள்ளியது. அதன்படி, உலகம் முழுவதும் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது ஜெயிலர். படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத்திற்கு கார்களை பரிசாக வழங்கினார்.

மது போதையில் ரகளை... ஜெயிலர் வர்மன் கைது

இந்நிலையில், வில்லன் நடிகர் விநாயகனை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். எர்ணாகுளம் காவல் நிலையத்தில் அவர் ரகளையில் ஈடுபட்டதாக கூறி அவரை கைது செய்தனர். இதுமட்டுமன்றி மதுபோதையில், காவல்துறை அதிகாரியை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பிறகு, விநாயகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

Share this story