தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ‘எல்லம்மா’ படத்தின் பாடல் -எப்போது ரிலீஸ் தெரியுமா ?

dsp-and-suriya-33

வேணு யெல்தண்டி இயக்கத்தில் தில் ராஜூ வழங்க, சிரிஷ் தயாரிப்பில் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ என்ற பன்மொழி படத்துக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் படத்தை பற்றிய அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களை முன்னிலைப்படுத்தும் 100 பாரம்பரிய நாட்டுப்புற இசைக்கலைஞர்களுடன் இணைந்து, ‘எல்லம்மா’ படத்தின் டைட்டில் பாடலை தேவிஸ்ரீ பிரசாத் ஒலிப்பதிவு செய்துள்ளார். விரைவில் வெளியாகும் இப்பாடல், அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில், வரும் மார்ச் 5ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

Share this story