'கொம்புசீவி' பட டப்பிங் பணிகள் தொடக்கம்

விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடித்து வரும் கொம்புசீவி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் கிராமத்து சார்ந்த நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.
இந்நிலையில் அடுத்ததாக பொன்ராம், மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத் குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ShanmugaPandian's #Kombuseevi dubbing has started 🎤
— AmuthaBharathi (@CinemaWithAB) May 20, 2025
Directed by Ponram 🎬pic.twitter.com/foWeNGYkzn
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். பட தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் செய்கிறார். இப்படத்திற்கு கொம்புசீவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் 1996 ஆம் ஆண்டு உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. விரைவில் திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.