பிரதர் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு..!
1726232408916
ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது. பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் படத்தின் டீசர் மற்றும் இசை வெளியாகும் என அறிவித்துள்ளனர்.இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகளை இன்று ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் முடித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போட்டோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
Get ready to vibe with #brother for this Diwali 💥@actor_jayamravi and @priyankaamohan final dubbing completed, Post production in full swing 🔥
— Screen Scene (@Screensceneoffl) September 13, 2024
Musical surprises on your way 🎸@rajeshmdirector @Jharrisjayaraj @thinkmusicindia @johnsoncinepro #brotherfromdiwali pic.twitter.com/bWUkHmWrAz