'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் டப்பிங் பணி தொடக்கம்...!

DD next level

'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரேம் இயக்கிவரும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் மே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் நடிகர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023-ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.


ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கிவருகிறார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதற்கிடையில் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில் முழுவதும் நிறைவடைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

இப்படம் மே மாதம் வெளியாக உள்ள நிலையில், இன்று இப்படத்திற்கான டப்பிங் பணியை நடிகர் சந்தானம் தொடங்கியுள்ளார். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. 2023-ல் வெளியாகி வெற்றி பெற்ற 'டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் தொடர்ச்சியான இந்த படமும் வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this story