துல்கர் சல்மானின் மிரட்டலான நடிப்பில் ‘கிங் ஆஃப் கோதா’.. ரிலீஸ் குறித்த அறிவிப்பு !

KingOfKotha

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் பிசியாக நடித்து வருபவர் துல்கர் சல்மான். தென்னிந்தியாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அவர், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. இந்த படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்கி வருகிறது. 

KingOfKotha

இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்து வருகிறார். இவர்களுடன் செம்பன் வினோத் ஜோஸ், ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் ஷபீர், பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்து வருகின்றனர். 

மலையாளம், தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் ஓணம் பண்டிகையையொட்டி வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மிரட்டலான போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. 

 

Share this story