துல்கருடன் இணைந்த ஜிவி பிரகாஷ்... பிறந்தநாளையொட்டி டைட்டில் அறிவிப்பு !

lucky bhaskar

 நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தெலுங்கில் பிரபல இயக்குனராக இருக்கும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் துல்கர் சல்மான் நடிக்க உள்ளார். தமிழில் தனுஷின் 'வாத்தி' படத்தின் மூலம் பிரபலமானவர். தெலுங்கில் சினேகா கீதம், மிஸ்டர் மஞ்சு, ராங் டி, தோழி பிரேமா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.

dulquer Salmaan

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட இந்த படம் துல்கர் சல்மானின்  மூன்றாவது நேரடி தெலுங்கு  படமாக உருவாகிறது. முதற்கட்ட பணிகள் நடைபெறும் இந்த படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் துல்கர் சல்மானின் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'லக்கி பாஸ்கர்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ரூபாய் நோட்டுகளுக்கு மத்தியில் துல்கர் சல்மான் இருக்கிறார். இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ஜிவி பிரகாஷ், 'வாத்தி' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் வெங்கி அட்லூரி படத்தில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நடிகர் துல்கர் சல்மானுடன் முதல்முறையாக இணைந்து பணியாற்ற உள்ளேன். நல்ல கதையம்சத்துடன் உருவாகும் இந்த படம் உருவதாக அவர் தெரிவித்துள்ளார். 


 


 

Share this story