துல்கர் சல்மானின் #dQ40 பட டைட்டில் ரிலீஸ்...!

dq40

துல்கர் சல்மானின் 40-வது படத்தின்  டைட்டில் வெளியாகி உள்ளது. 

மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான்,தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் கடந்த 2012ம் ஆண்டு வெளியான 'செக்கண்டு சோவ்' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அவர் நடிப்பில் வெளியான "சீதா ராமம்", 'லக்கி பாஸ்கர்' படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தன. 



இந்நிலையில், துல்கர் சல்மான் நடிக்கும்  40-வது படத்தின்  டைட்டில் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'ஐ அம் கேம்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இப்படம் சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story