கவிதை படிக்கிற மாதிரி நெகிழவைக்கும் காதல் படம் ‘சீதா ராமம்’.. திரைவிமர்சனம் இதோ !

இந்தியா-பாகிஸ்தான் பஞ்சாயத்து, காஸ்மீர் பார்ட்டர்ல நடக்கிற கதை… சரி, தீவிரவாதிகளைப் போட்டுத் தள்ளிட்டு பக்கம் பக்கமா டயலாக் பேசுற வழக்கமான படமா இருக்கும்ன்னு நினைத்தால் ; 'கல்யாண்ஜி' கவிதை படிக்கிற மாதிரி நெகிழவைக்கும் காதல் க(வி)தை!
லண்டன்ல படிச்சுக்கிட்டிருக்கிற பாகித்தானி பெண் - ராஷ்மிகா மந்தனா. இந்தியா மீது ஏற்பட்ட வெறுப்புல காலேஜ் கரஸ்பாண்டன்ட் காரை தீ வச்சு கொளுத்திர்றார். மன்னிப்பு கேட்டால் விட்டுர்றேன்னு சொல்லியும்,மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறார். போகட்டும்,ஒரு மாசம் டைம் தர்றேன்… பத்து லட்ச ரூபாய் பணத்தை கட்டு, இல்லேன்னா ஜெயிலுக்குப் போகணும்னு சொல்லிடுது நிர்வாகம். 'பணத்துக்கு என்ன பண்ணப் போற? பேசாம மன்னிப்பு கேட்ருக்கலாம்!'ம்னு கூட இருக்கிற ஃப்ரெண்ட் சொல்கிறார். 'இந்தாள்ட்ட மன்னிப்புக் கேக்குறதுக்குப் பதிலா,பத்து வருசமா பேசாம இருக்கிற எங்க தாத்தாகிட்ட போய் மன்னிப்புக் கேட்கிறேன்'ன்னு சொல்லிட்டு ஃப்ளைட்டைப் புடிச்சு பாகிஸ்தான் வருகிறார். ராணுவத்தில் மேஜராக இருந்த தாத்தா செத்தே ரெண்டு வருஷமாச்சுன்னு சொல்றார்,அவரது குடும்ப லாயர்.
எனக்குன்னு சொத்து எழுதி வச்சிருப்பார்ல அதுலருந்து ஒரு பத்து லச்சத்த குடுங்க நான் போயிர்றேன்னு கேட்கிறார் ராஷ்மிகா. அப்படியெல்லாம் கொடுத்துற முடியாது! இந்த லெட்டரைக் கொண்டு போய்… இந்தியாவுல இருக்கிற 'சீதா மஹாலட்சுமி'ங்கிறவர்ட்ட கொடுக்க வேண்டியது உன்னோட கடமை.அந்த வேலையை முடிச்சாதான் பணம் தருவேன் என்கிறார் லாயர். இதென்ன பைத்தியக்காரத்தனமா இருக்கு என்றபடி லெட்டரை வாங்கிப் பார்த்தல், இருவது முந்தி எழுதின லெட்டர். அதுவுமில்லாம… அதுவுமில்லாம, ஏற்கனவே ரெண்டு தடவை ஆளில்லேன்னு ரிட்டன் ஆகியிருக்கு. பணம் இல்லாமல் லண்டன் போக முடியாதுங்கறதால… 'தேவையில்லாத ஆனி'என்ற நெனப்போடையே இந்தியாவுக்கு வருகிறார்.
அவர் தேடி வந்த பேலஸ் இப்போ காலேஜா மாறியிருக்கு. நான் நாப்பது வருஷமா இங்கதான் இருக்கேன்… சீதா மஹாலட்சுமின்னு யாரும் கிடையாதுன்னு அவரும் ஒரு டிவிஸ்ட் குடுக்கிறார்.அதுக்கப்புறம்,சின்னச் சின்ன தடையங்களைப் பிடிச்சு தேடிப் போகிறார்.ராம் என்ற பேரோடு துல்கர் சல்மான் ஆர்மில வேலை பார்க்கிற போது நடந்த தரமான சம்பவத்துக்காக, அவரையும் அவரது நண்பரையும் நாடே கொண்டாடுது.ஆல் இண்டியா ரேடியோவுக்கு பேட்டியெடுக்க வர்ற ரோஹிணி,லைவ் நிகழ்ச்சியில் பேசும் போது தான் ஒரு அநாதை என்கிறார் துல்கர். ரேடியோவில் பேசும்போது இதைச் சொல்லி நான் என் மகனுக்கு ஒரு லெட்டர் எழுதி அனுப்பிட்டேன்… அப்போ நீங்க… என்று சொல்லி நேயர் விருப்பத்துக்கு விட்றார்.அதுக்கப்புறம் லெட்டரா குமியுது.
சுவாரஸ்யமான லெட்டர்ஸ் நிறைய இருந்தாலும்… ஒரு லெட்டர் மட்டும் காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதப்பட்ட கவிதை. உங்கள் மனைவி 'சீதா மஹாலட்சுமி'ங்கிற பேரோட லெட்டர் முடியுது. ஃப்ரேம் அட்ரெஸ் இல்லாத அந்த லெட்டருக்கு பதில் லெட்டர் எழுதி பத்திரப்படுத்தி வைக்கிறார்.
ரஷ்மிகா தேடிப்போற இடத்துல சந்திக்கிற ஆட்கள்,அவரவரோட பாயிண்ட் ஆஃப் வியூல ராம் - சீதா மஹாலட்சுமி இருவருக்குமான காதலைச் சொல்கிறார்கள். இப்படியெல்லாம் யோசிக்க முடியுமான்னு ஆச்சர்யப்படுறளவுக்கு அட்டகாசமான காதல் கதை. அறுபத்தஞ்சு,எண்பது என வெவ்வேறு காலங்களில் நடக்கிற பீரியட் மூவி. காட்சிப் படுத்திய விதம்,இசை,மதன் கார்கியின் பங்களிப்பு என மொத்த டீமும் செம ஃபார்ம்ல ஒர்க் பண்ணியிருக்கிறார்கள்.
துல்கர்,ராஷ்மிகா,மிருணாளி தாகூர் தொடங்கி படத்தில் வருகிற ஒவ்வொரு கேரக்டரும் ஞாபகத்தின் அடி ஆழத்தில் எப்போதும் இருப்பார்கள்.ரொம்ப நாளைக்கு அப்புறம் பெர்ஃபெக்ட் ஸ்க்ரீன் ப்ளேவோட வந்திருக்கிற படம் இது.காவி நெடி அடிப்பதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.இயக்குனர் ஹனுராகவபுடிக்கு வாழ்த்துகள்.
இதுவரை வந்த பெஸ்ட் லவ் மூவி என்று நீங்கள் ஏதாவது லிஸ்ட் வச்சிருந்தால்… அதில்,இந்தப் படத்தையும் சேர்த்துக்கலாம்.
- V.K.சுந்தர்