துல்கர் சல்மானின் 'காந்தா' டீசர் வெளியானது!
1753702759099
துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள 'காந்தா' படத்தின் டீசர் வெளியானது.

தென்னிந்திய பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் காந்தா திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் காந்தா திரைப்படத்தில் நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸும் முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, ராணா டக்குபதி ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரான எம். கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டீசர் நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

