நில நடுக்கத்தால் குலுங்கிய காஷ்மீர் – ‘லியோ’ படக்குழுவிற்கு என்ன ஆச்சு? ட்வீட் செய்த தயாரிப்பு நிறுவனம்.

photo

தளபதி விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ‘லியோ’ திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவிற்கு மத்தியில் தயாராகி வருகிறது. இப்படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிச்சியை ஏற்படுத்தியது. விஜய் உள்ளிட்ட படக்குழுவிற்கு என்ன ஆனதோ? என பதறிய ரசிகர்களுக்கு தங்களின் நிலை குறித்து ட்வீட்டர் மூலமாக படக்குழு தெரியப்படுத்தியுள்ளனர்.   

photo

 ஆப்கானிஸ்தானிலுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் 6.8 என்ற அளவிகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்க பதிவானது. இதன்தாக்கம், டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா, காஷ்மீர்  போன்ற மாநிலங்களில் 45 நொடிகள் முதல் 1 நிமிடம் வரை நீடித்துள்ளது. தொடர்ந்து இந்தியா மட்டுமின்றி துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட  நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் பரவியது. இதனை அறிந்த ரசிகர்கள் காஷ்மீரில் படபிடிப்பை நடத்திவரும் ‘லியோ’ படக்குழுவின் நிலை என்ன? என தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வந்தனர்.

photo

 இதற்கு அதிலளிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ, ‘we area safe nanba – team LEO’  என பதிவிட்டு சந்திரமுகி படத்தில் வடிவேலு வேட்டையன் அரண்மனையில் பொம்மைகள்  விழுவதை பார்த்து மரணபீதியில் இருக்கும் GIF ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

photo

 

Share this story