தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டில் ரெய்டு.. என்ன காரணம்..?
பிரபல தயாரிப்பாளரும், சீரியல் நடிகை மகாலக்ஷ்மியின் கணவருமான ரவீந்தர் பிக் பாஸ் ஷோ விமர்சகர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்.அவர் சில மாதங்களுக்கு முன்பு பண மோசடி வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றார். சில மாதங்கள் சிறையில் இருந்து அதன் பிறகு அவர் ஜாமினில் வெளியில் வந்தார்.
திடக்கழிவில் இருந்து பவர் எடுக்கும் பிஸ்னஸ் என கூறி 16 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக அவர் மீது வழக்கு பதிவு ஆன நிலையில் தான் ரவீந்தர் கைது ஆனார்.இந்நிலையில் சென்னை அசோக் நகர் பகுதியில் இருக்கும் ரவீந்தர் - மஹாலக்ஷ்மியின் வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு செய்துள்ளனர். வீட்டில் இருந்து அவர்கள் ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாகவும், அது பற்றிய தகவல் அமலாக்கத்துறை விரைவில் வெளியிடும் என்றும் தெரிகிறது.ஏற்கனவே பதிவாகி இருக்கும் மோசடி வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது என்கிற புகாரின் அடிப்படையில் தான் இந்த ரெய்டு நடந்து இருக்கிறது.